உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தெருவில் குப்பை கொட்டாதீங்க... காரமடை நகராட்சி எச்சரிக்கை

தெருவில் குப்பை கொட்டாதீங்க... காரமடை நகராட்சி எச்சரிக்கை

மேட்டுப்பாளையம்;'தெருக்கள், சாலைகளில் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என காரமடை நகராட்சி கமிஷனர் மனோகரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.காரமடை நகராட்சி பகுதிகளை துாய்மையாக வைத்திருப்பதற்காக, நகராட்சி நிர்வாகம் சார்பில் துாய்மைப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கின்றனர். இதையடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் 11க்கும் மேற்பட்ட இடங்களில் தெருக்கள், சாலையோரம் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டன. இப்பகுதிகளில் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்தது. ஆனாலும், மக்கள் அப்பகுதிகளில் குப்பை கொட்டி வருகின்றனர். அவ்விடங்களில் தேங்கும் குப்பைகளை அகற்றுவதில் காலதாமதமும் ஏற்படுகிறது.இதுகுறித்து காரமடை நகராட்சி கமிஷனர் மனோகரன் கூறகையில், ''குப்பைகளை வீடு வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து துாய்மைப் பணியாளர்கள் சேகரித்து வருகின்றனர். மக்கள், குப்பைகளை துாய்மைப் பணியாளரிடம் தான் கொடுக்க வேண்டும். சாலையில், தெருக்களில் கொட்டக்கூடாது. அப்படி கொட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மக்களிடம் குப்பைகளை பிரித்து வழங்கவும், தெருக்களில் கொட்டக்கூடாது எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்த நகராட்சி ஊழியர்கள் நியமிக்கப்பட்டு, அவர்கள் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தெருக்களில் உள்ள குப்பைகள் காலதாமதம் இன்றி அகற்றப்பட்டு வருகின்றன,'' என்றார்.---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்