உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திரவுபதி அம்மன் கோவில் திருவிழா கோவிந்தா கோஷமிட்டு பரவசம்

திரவுபதி அம்மன் கோவில் திருவிழா கோவிந்தா கோஷமிட்டு பரவசம்

ஆனைமலை, ; ஆனைமலையில் பழமை வாய்ந்த தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் குண்டம் தேர்த்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு நேற்று கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது.விழாவையொட்டி, கடந்த, 25ம் தேதி இரவு, 78 அடி நீளம் உள்ள மூங்கில் கம்பம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.நேற்று மூங்கில் கம்பத்துக்கு உப்பாற்றங்கரையில் பூஜை நடத்தப்பட்டது. அதன்பின், திரளான பக்தர்கள் திரவுபதி அம்மன் கோவிலுக்கு கொடிமரத்தை கொண்டு வந்தனர். கோவில் வளாகத்தில் கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.அதன்பின், கருடாழ்வார் கொடி கட்டப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூங்கில் கம்பம் நிலை நிறுத்தப்பட்டது.கம்பம் நிலை நிறுத்தும்போது, பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி, வழிபட்டனர். சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த தர்மராஜா, திரவுபதி அம்மனை பக்தர்கள் தரிசித்தனர். அறங்காவலர் செந்தில்வேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.வரும், மார்ச் 5ம் தேதி அம்மன் திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. 11ம் தேதி கண்ணபிரான் துாது, சுவாமி புறப்பாடு, குண்டத்துக்காட்டில் விஸ்வரூப தரிசனம், 14ம் தேதி அம்மன் ஆபரணம் பூணுதல், ஊர்வலம், அரவான் சிரசு, ஊர்வலம் நடக்கிறது.வரும், 15ம் தேதி குண்டம் கட்டுதல், அலங்கார பெரிய திருத்தேர் வடம் பிடித்தல், குண்டம் பூ கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.16ம் தேதி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும், திருத்தேர் ஊர்வலம்; 17ம் தேதி திருத்தேர் நிலை நிறுத்தல்; ஊஞ்சல் பட்டாபிேஷகம் நடக்கிறது.வரும், 18ம் தேதி மஞ்சள் நீராடுதல், போர் மன்னன் காவு நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 18ம் தேதி தினமும் காலை, 10:30 மணி, இரவு, 7:00 மணிக்கு விசேஷ பூஜைகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி