மேலும் செய்திகள்
ஓய்வூதியர் சங்க பேரவை கூட்டம்
21-Aug-2024
கோவை: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்க கோவை கிளை பேரவை கூட்டம், கோவை ஐ.எம்.ஏ., ஹாலில் நேற்று நடந்தது.தமிழக முதல்வர் அறிவித்த 6 தவணை கூடுதல் அகவிலைப்படி உயர்வுகளை குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு மட்டும் அரசு அறிவித்த நாளில் இருந்து வழங்காமல், வழக்கத்துக்கு மாறாக, பின்தேதிகளில் வழங்க உத்தரவிட்டிருப்பது, சமூக நீதி, சமத்துவம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி நிலுவையை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும்.பழைய ஓய்வூதிய திட்டத்தை விரைந்து அமல்படுத்த வேண்டும். புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணைந்த அனைத்து ஓய்வூதியர்களுக்கும் அரசாணைப்படி புதிய அட்டை வழங்க வேண்டும்.குடிநீர் வடிகால் வாரியத்தை அரசு துறையாக மாற்ற வேண்டும். ஜல்ஜீவன் திட்டம், கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்துவதால், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.உப தலைவர் விஸ்வநாதன், கோவை கிளை தலைவர் இளங்கோவன், செயலாளர் ஆரோக்கியசாமி, மாநில இணை செயலாளர் அண்ணாமலை, பொது செயலாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
21-Aug-2024