உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேகத்தடை அமையுங்க ஓட்டுநர்கள் கோரிக்கை

வேகத்தடை அமையுங்க ஓட்டுநர்கள் கோரிக்கை

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, தாலுகா அலுவலகம் செல்ல புது பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து, சர்வீஸ் ரோட்டில் நடந்தோ அல்லது பைக் வாயிலாகவோ செல்ல வேண்டும். இந்த சர்வீஸ் ரோடும் குறுகலாக இருப்பதால் அவ்வப்போது வாகன நெரிசல் ஏற்படுகிறது.தாலுகா அலுவலகத்துக்கு, நாள்தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்லும் நிலையில், 'ஒன் வே'யில் பயணிக்கும் நிலை உள்ளது. இதனால் ஒன்றிய அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகத்தில் இருந்து பைக்கில் வருவோர், சர்வீஸ் ரோட்டில், நின்று, கவனித்து, செல்ல வேண்டியுள்ளது. இதனால், அவ்வப்போது விபத்து ஏற்படுகிறது.வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, தாலுகா அலுவலகம் மற்றும் ஒன்றிய அலுவலகத்தின் முன் உள்ள சர்வீஸ் ரோட்டில் வேகத்தடை அமைக்க, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை