உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி

போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி

கோவை : கோவை, நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியில், போதைப் பொருள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.கல்லூரியின் போதை தடுப்புக் குழு, நாட்டு நலப் பணித் திட்டம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்து, போதைக்கு எதிரான கையெழுத்து இயக்கத்தை துவங்கிவைத்தார். கல்லூரி முதல்வர் சிவகுமார் வரவேற்றார். கோவை மாநகர சிங்காநல்லூர் சரக உதவி காவல் ஆணையர் பார்த்திபன், பேராசிரியர்கள் போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினர். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் பிரகதீஸ்வரன் போதைப் பொருள் உறுதிமொழியை வாசிக்க, மாணவர்கள், பேராசிரியர்கள் ஏற்றுக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ