உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆனந்த சைதன்யா சார்பில் கல்வி உதவி வழங்கும் விழா

ஆனந்த சைதன்யா சார்பில் கல்வி உதவி வழங்கும் விழா

கோவை,; கோவை ஆனந்த சைதன்யா அறக்கட்டளை சார்பில், கற்கை நன்றே எனும், ஏழை எளிய மாணவர்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.கோவை குரும்பபாளையத்தில் செயல்பட்டு வரும் ஆனந்த சைதன்யா அறக்கட்டளை சார்பில், நேற்று கற்கை நன்றே சாதனையாளர்கள் விருதுகள் வழங்கப்பட்டன. இன்ஜினியரிங், மருத்துவம் மற்றும் கலை படிப்புகளை சார்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவி தொகை, சிறப்பு பரிசுகள், கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டன.விழாவில், ஏ.ஒ.எஸ். டி.ஏ., சாப்ட்வேர் நிறுவன இயக்குனர் அரவிந்த், இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜராஜன், துபாய் விமானத்துறை தனியார் நிறுவன இயக்குனர் சிவ ஆனந்த், எழுத்தாளர் விஜயகுமார் ஆகியோர் பேசினர்.ஆனந்த சைதன்யா அறக்கட்டளையின் நிறுவனர் தில்லை செந்தில் பிரபு, விருதுகளையும், உதவி தொகைகளையும் வழங்கி பேசுகையில், கல்வி, பொருள் தேடும் கருவியாக மட்டும் அல்லாது, அறத்தின் வழியில் வாழ்ந்து, ஞானமும் ஆனந்தமும் அடைய உதவுவதே அறக்கட்டளையின் நோக்கம்,'' என்றார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, ஆனந்த சைதன்யா அறக்கட்டளை தன்னார்வலர்கள் சண்முகசுந்தரம், ராஜ முருகன், சசிகுமார், விக்னேஷ் சுரேஷ் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ