| ADDED : ஜூலை 23, 2024 12:11 AM
மேட்டுப்பாளையம்;காரமடையில் உள்ள புனித மகதலா மரியா ஆலயத்தில் தேர்த்திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. காரமடையில் கோவை சாலையில், புனித மகதலா மரியா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தேர் திருவிழா கொடியேற்றம் நடந்தது. பங்கு பாதிரியார் ஜான் யேசு சிஜு தலைமையில் திருப்பலி நடந்தது. கோவை மறைமாவட்ட பொருளாளர் செல்வராஜ், திருப்பலியை நிறைவேற்றி, கொடியை ஏற்றி வைத்தார். விழாவை முன்னிட்டு ஐந்து நாட்களுக்கு மாலை, 6:00 மணிக்கு சிறப்பு நவநாள் திருப்பலிகள் நடைபெற உள்ளன. 28ம் தேதி காலையில் கோவை மறை மாவட்ட மேய்புப்பணி மைய இயக்குனர் பாதிரியார் ஆண்டனி யேசுராஜ், திருவிழா கூட்டு பாடற்பலியை நிறைவேற்றுகிறார். அன்று மாலை, 5:30 மணிக்கு நடைபெறும் தேர்த்திருவிழா சிறப்பு திருப்பலியை மேட்டுப்பாளையம் புனித அந்தோணியார் ஆலய பங்கு பாதிரியார் ஹென்றி லாரன்ஸ் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. இரவு 7:30 மணிக்கு அலங்கார தேர் பவனியும், அதை தொடர்ந்து நற்கருணை ஆசீரும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை பங்கு பாதிரியார் ஜான் யேசு சிஜு மற்றும் பங்கு பேரவையினர், பங்குமக்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.