உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அட்வகேட்ஸ் அசோசியேசன் நிர்வாகிகள் தேர்வு

அட்வகேட்ஸ் அசோசியேசன் நிர்வாகிகள் தேர்வு

அன்னுார்:அன்னுார் அட்வகேட்ஸ் அசோசியேசன் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அன்னுாரில், சத்தி சாலையில், கடந்த ஆண்டு முதல், கோர்ட் செயல்பட்டு வருகிறது. அன்னுாரில் அட்வகேட்ஸ் அசோசியேசன் கூட்டம் நடைபெற்றது. இதில் அசோசியேசன் தலைவராக சிவக்குமார், துணைத் தலைவராக தேவி சரவணன், செயலாளராக தங்கமணி, இணை செயலாளராக சுபாஷிணி, பொருளாளராக பூபாலன், நிர்வாக குழு உறுப்பினர்களாக முரளிதரன், சாந்தகுமார், கார்த்திகேயணி, கவிதா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தேர்தல் அதிகாரியாக திருவேங்கடம் செயல்பட்டார். புதிய நிர்வாகிகளுக்கு, வழக்கறிஞர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி