மேலும் செய்திகள்
காலமானார் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது
2 hour(s) ago
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்
2 hour(s) ago
ஜன., 3ல் ஆருத்ரா தரிசனம்
3 hour(s) ago
அசத்தலான அசைவ விருந்துடன் கிறிஸ்துமசை கொண்டாடலாம்
4 hour(s) ago
ஆனைமலை;ஆனைமலை அருகே சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில், யானை, காட்டுப்பன்றிகள், மான் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. இந்நிலையில், ஆனைமலை அருகே சேனைக்கல்ராயன் குன்று பகுதியில் நேற்றுமுன்தினம் மாலை, 4:30 மணிக்கு சிறுத்தை ஒன்று ஒரு பாறை மீது அமர்ந்து இருந்தது. இதை கண்ட அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.பொதுமக்கள் கூறுகையில், 'சேனைக்கல்ராயன் குன்று பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. அப்பகுதியில், இரண்டு விதமான சிறுத்தை கால்தடங்கள் பதிவாகி உள்ளன.சிறுத்தை நடமாட்டத்தால் அச்சம் எழுந்துள்ளது.கால்நடைகளுக்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும். எனவே, வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பு செய்ய வேண்டும். சிறுத்தையை பிடித்து வனப்பகுதியில் விடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
3 hour(s) ago
4 hour(s) ago