உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேலைவாய்ப்பு பயிற்சி மையம் இழப்பீடு வழங்க உத்தரவு

வேலைவாய்ப்பு பயிற்சி மையம் இழப்பீடு வழங்க உத்தரவு

கோவை : கோவையை சேர்ந்த ஹேமச்சந்திரன் என்பவர், அரசுப்பணி தேர்வு எழுத, ஆர்.எஸ்.புரத்திலுள்ள வேரந்தாரேஸ் என்ற தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்தார். பயிற்சி கட்டணம், முதற்கட்டமாக,15,000 ரூபாய் செலுத்தினார். வகுப்புக்கு சென்ற பிறகு, பயிற்சி புத்தகம், வீடியோ தொகுப்பு ஆகியவற்றை வழங்க தாமதம் செய்தனர். இதனால், பயிற்சி வகுப்பிலிருந்து விலகிய அவர், பணத்தை திருப்பி கேட்ட போது வழங்க மறுத்தனர்.பாதிக்கப்பட்ட ஹேமச்சந்திரன், கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல், ''எதிர் மனுதாரர் சேவை குறைபாடு செய்திருப்பதால், பயிற்சி கட்டணம், 15,000 ரூபாயை, திரும்ப கொடுப்பதோடு, வழக்கு செலவு தொகை, 2,000 ரூபாய் மனுதாரருக்கு வழங்க வேண்டும்,'' என்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ