நாய்கள் தொல்லை
பொள்ளாச்சி, ஜோதி நகர் பகுதியில் சத்திய மூர்த்தி சாலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் தெரு நாய்கள் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் ரோட்டில் நடந்து செல்லவும், பைக்கில் பயணிக்கும் போதும் அச்சுறுத்துகிறது. எனவே, நகராட்சி நிர்வாகம் இதை கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- - சரவணன், ஜோதி நகர். பாதாள சாக்கடை சேதம்
பொள்ளாச்சி, பாலகோபாலபுரம் வீதி அருகே பாதாள சாக்கடை குழி சேதம் அடைந்துள்ளது. இதனால் அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் மற்றும் அப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கு அதிக அளவு பாதிப்பு ஏற்படுகிறது. இதை தவிர்க்க நகராட்சி நிர்வாகம் இதை கவனித்து உடனடியாக சீரமைத்து தர வேண்டும்.- - பெருமாள், பொள்ளாச்சி. ஊராட்சி கவனத்துக்கு
கிணத்துக்கடவு, செக்போஸ்ட் பகுதியில் இ.பி., அலுவலகம் செல்லும் வழியில் ரோட்டோரத்தில் அதிகமாக குப்பை கொட்டி அவ்வப்போது தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் அவ்வழியில் வாகனங்கள் சென்று வர சிரமம் ஏற்படுகிறது. எனவே, வாகன ஓட்டுனர்கள் நலன் கருதி இப்பகுதியில் குப்பை கொட்டி எரிப்பதை ஊராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும்.-கார்த்தி, கிணத்துக்கடவு. சுகாதாரம் பாதிப்பு
உடுமலை - பழநி ரோட்டில், தங்கம்மாள் ஓடை கரையில் குப்பை, கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுகாதாரமும் பாதிக்கப்படுகிறது.- செல்வம், உடுமலை. நிழற்கூரை பராமரிக்கணும்
உடுமலை காந்திநகர் பஸ் ஸ்டாப் நிழற்கூரை பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால், இதை பயன்படுத்த பயணியர் தயக்கம் காட்டுகின்றனர். எனவே, நகராட்சி அதிகாரிகள் இந்த நிழற்கூரையை பராமரித்து அழகுபடுத்த வேண்டும்.- கண்ணன், உடுமலை. டிவைடர் வையுங்க
பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலை கிணத்துக்கடவு, கல்லாங்காட்டுபுதூர் யூ டர்ன் பகுதியில் விபத்து அபாயம் உள்ளது. இதை தவிர்க்க இப்பகுதியில் இரண்டு புறமும் டிவைடர்கள் வைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- மணிகண்டன், கிணத்துக்கடவு. வேகத்தடை வைக்கணும்
உடுமலை - திருப்பூர் ரோடு ஏரிப்பாளையம் பகுதியில் வேகத்தடை இல்லை. இரண்டு பக்கத்திலிருந்தும் வாகனங்கள் அதிவேகமாகச்செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. இரண்டு சக்கர வாகன ஓட்டுநர்கள் அப்பகுதியில் அடிக்கடி வேகத்தை கட்டுபடுத்த முடியாமல் தடுமாறி விழுகின்றனர்.- சாரதி, உடுமலை. விபத்து அபாயம்
உடுமலை, பஸ் ஸ்டாண்ட் நடைபாதை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இல்லை. சுகாதாரமில்லாமலும், ஆக்கிரமிக்கப்பட்டும் உள்ளது. இதை பயன்படுத்த முடியாமல் மக்கள் ரோட்டில் இறங்கிச்செல்கின்றனர். இதனால் விபத்து அபாயமும் அதிகம் உள்ளது.- வாசுதேவன், உடுமலை. குப்பையை அகற்றணும்
உடுமலை, ஆண்டாள் சீனிவாசன் லே அவுட் விரிவாக்கப்பகுதியில், பிளாஸ்டிக் கழிவுகள், அட்டை, குப்பை வீசப்படுகின்றன. இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவவும் வாய்ப்புள்ளது. எனவே, குப்பை, கழிவுகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மோகன், உடுமலை. கொசுத்தொல்லை
உடுமலை நகரப்பகுதியில், கொசுப்புழு ஒழிப்புக்கு முறையான நடவடிக்கை எடுப்பதில்லை. புகைமருந்து மற்றும் தண்ணீர் தொட்டிகளுக்கும் மருந்து தெளிக்காமல் உள்ளது. இதனால் நகரப்பகுதி குடியிருப்புகளில் கொசுத்தொல்லை அதிகமாக உள்ளது. டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமும் உள்ளது.- சுதா, உடுமலை. 'லொள்' தொல்லை
உடுமலை, எஸ்.வி., புரம் பி.வி லே- அவுட் பகுதியில் 'லொள்' தொல்லை அதிகரித்துள்ளது. பொதுமக்கள் நிம்மதியாக ரோட்டில் நடக்கமுடிவதில்லை. குழந்தைகள் விளையாடும்போதும், வாகன ஓட்டுனர்களையும் துரத்தி அச்சுறுத்துகின்றன. கணக்கம்பாளையம் ஊராட்சி நிர்வாகத்தினர் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மணி, உடுமலை. குப்பை எரிப்பு
கிணத்துக்கடவு, கோவிந்தாபுரம் பகுதியில் ரோட்டோரத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பையில், பிளாஸ்டிக் கழிவும் சேர்ந்து தீ வைத்து எரிப்பதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் பொது சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, ஊராட்சி நிர்வாகம் சார்பில் திறந்த வெளியில் குப்பைக்கு தீ வைத்து எரிப்பதை தடுக்க வேண்டும்.- - முருகன், கோவில்பாளையம்.