உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொறியியல் கல்லுாரியில் ஆங்கில மொழியியல் விழா

பொறியியல் கல்லுாரியில் ஆங்கில மொழியியல் விழா

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, பி.ஏ., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், ஆங்கில மொழியியல் சங்கம் வாயிலாக 'உட்சவம் 5.0' என்ற தலைப்பில் தேசிய அளவிலான ஆங்கில மொழியியல் விழா நடந்தது.பி.ஏ., கல்வி நிறுவனங்களின் தலைவர் அப்புகுட்டி, துணைத்தலைவர் லட்சுமி விழாவை துவக்கி வைத்தனர். கல்லுாரி முதல்வர் மணிகண்டன் வரவேற்றார். தொடர்ந்து, பல்வேறு பொறியியல் கல்லுாரி மாணவர்கள், பிக்சி, வேர்டு பிளே, குவஸ்ட் பார் ஜெஸ்ட், பியாண்ட் த மாஸ்க் அண்ட் ப்ளாக் அண்ட் பியூரியஸ் நிகழ்வுகளின் வாயிலாக திறமைகளை வெளிப்படுத்தினர்.நடுவர் மன்றம் வாயிலாக, சிறந்த மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, சான்றிதழ் மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. அறிவியல் மற்றும் மனித பண்பாட்டியல் துறைத்தலைவர் யுவராஜா, பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ