உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நில அளவையில் அனைத்தும் ஆன்லைன்! அமலுக்கு வந்தது புதிய நடைமுறை

நில அளவையில் அனைத்தும் ஆன்லைன்! அமலுக்கு வந்தது புதிய நடைமுறை

கோவை; வீட்டுமனை மற்றும் நில உரிமையாளர்கள், தங்களது நிலங்களை அளக்க, சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பித்து வரும் சூழலில், https://tamilnilam.tn.gov.in/citizen என்ற ஆன்லைன் தளத்தில் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, மக்கள் நிலத்தை அளக்க, 'எந்நேரத்திலும் எந்த இடத்திலிருந்தும், கட்டணத்தை 'சிட்டிசன் போர்ட்டல்' வாயிலாக செலுத்தி, இணையவழியிலேயே விண்ணப்பிக்கலாம்.தற்போது இச்சேவை, கோவையிலுள்ள அனைத்து பொது இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கும் வகையில், விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.நில அளவை செய்யப்படும் தேதி, மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது மொபைல் போன் வாயிலாக தெரிவிக்கப்படும். நில அளவை செய்யப்பட்ட பின், மனுதாரர் மற்றும் நில அளவையர் கையொப்பமிட்ட, 'அறிக்கை மற்றும் வரைபடம்' நிலஅளவையரால் பதிவேற்றம் செய்யப்படும். மனுதாரர், https://eservices.tn.gov.in/ என்ற இணையவழிச் சேவையின் மூலமாக, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இது குறித்து, மாவட்ட நில அளவைத்துறை உதவி இயக்குனர் சரவணன் கூறியதாவது: கோவை மாவட்டத்திலுள்ள, 11 தாலுகாக்களிலிருந்து நாளொன்றுக்கு 500 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வருகின்றன. அவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நில அளவைப்பணிகளுக்காக, 15 நாட்களில் நோட்டீஸ் வழங்குகிறோம். அதன் பின், ஒரு மாத காலத்திற்குள் நில அளவைப்பணிகளை முடித்துக்கொடுக்கிறோம். அதே நடைமுறையை, ஆன்லைனிலும் பின்பற்ற முடிவு செய்துள்ளோம். ஆன்லைன் நடைமுறையினால், மக்கள் வந்து செல்வதும், கட்டணம் செலுத்துவதிலும் உள்ள சிரமங்கள் தவிர்க்கப்படும்.இவ்வாறு, சரவணன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை