| ADDED : ஆக 20, 2024 01:47 AM
சூலுார்;சூலுார் முன்னாள் விமானப்படை வீரர்கள் சங்கம் சார்பில், வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர் களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது. சூலுார் முன்னாள் விமானப்படை வீரர்கள் சங்கம் சார்பில், வயநாடு இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி அளிக்க முடிவு செய்யப்பட்டது. சங்கத்தின் சார்பில், 75 ஆயிரம் ரூபாய் திரட்டப்பட்டு, வயநாடு முன்னாள் விமானப்படை வீரர்கள் சங்கநிர்வாகிகள், லாசர், கிருஷ்ணன் குட்டி, அப்துல் ஹசீஸ் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், சூலுார் முன்னாள் விமானப்படை வீரர்கள் சங்கத்தின் தலைவர் அப்துல் ஹக்கீம், பொதுச்செயலாளர் ரமேஷ்குமார், பொருளாளர் தேனப்பன், சுப்பிரமணியம், தனுஷ்கோடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல், இருகூர் மக்கள் குரல் அமைப்பின் தலைவர் நாகராஜ் தலைமையில் உறுப்பினர்கள் வேஷ்டி, சேலை மற்றும் நிவாரண பொருட்களை, வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று வழங்கினர்.