உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காட்டுப் பன்றி தாக்கியதில் விவசாயி காயம்

காட்டுப் பன்றி தாக்கியதில் விவசாயி காயம்

பொள்ளாச்சி : கோட்டூர் மலையாண்டிபட்டணத்தைச் சேர்ந்தவர் திருமலைசாமி, 67; விவசாயி. இவர், ஆழியாறு ஓட்டைக்கரடு பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்கு, பால் கறப்பதற்காக சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக காட்டுப்பன்றி அவரைத் தாக்கியது. இதில் திருமலைசாமியின் தலை, கை, கால்களில் படுகாயம் ஏற்பட்டது. கையில் மூன்று விரல்கள் துண்டாகின.திருமலைசாமி வீடு திரும்பாததால், அவரது மகன் தோட்டத்துக்குச் சென்று, காயமடைந்த நிலையில் இருந்த அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். வனத்துறையினர் மற்றும் கோட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ