உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கள் இறக்க அனுமதி கோரி விவசாயிகள் போராட்டம்

கள் இறக்க அனுமதி கோரி விவசாயிகள் போராட்டம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி, வேட்டைக்காரன்புதுார் விவசாயிகள், கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க கோரி, சப் - கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மனு கொடுத்தனர்.மனுவில் கூறியிருப்பதாவது:பல மாநிலங்களில் கள் இறக்கி விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. அதுபோல, தமிழக அரசு கள் இறக்க அனுமதிக்க வேண்டும். கேரளாவுக்கு, தமிழகத்தில் இருந்து பாறை மண், சக்கைக்கல், பால், காய்கறிகள், கோழி அனுப்புவதை போல, தென்னங்கள்ளையும் அனுப்பினால் விவசாயிகள் வாழ்வாதாரம் உயரும்.இவ்வாறு தெரிவித்துள்ளனர்.கள் இறக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி, விவசாய அமைப்புகள் சார்பில், தமிழகம் முழுதும், 22 இடங்களில் நேற்று நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்