உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பெட்ரோலிய குழாய் பதிக்க வாடகை கேட்கும் விவசாயிகள்

பெட்ரோலிய குழாய் பதிக்க வாடகை கேட்கும் விவசாயிகள்

சூலுார்;விளை நிலங்களில் பெட்ரோல் கொண்டு செல்லும் குழாய்கள் பதிக்க, வாடகை வழங்க வேண்டும், என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இருகூரில் இருந்து கரூர் மாவட்டத்துக்கு குழாய் மூலம் பெட்ரோல் கொண்டு செல்ல, பாரத் பெட்ரோலியம் நிறுவனம் பணிகளை மேற்கொண்டுள்ளது. இருகூர் அடுத்த ராவத்தூர் பகுதியில் குழாய் பதிக்கும் போது, விவசாய சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன. விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர். இதையடுத்து, பாரத் பெட்ரோலியம் நிறுவன அதிகாரிகள், தாசில்தார் மற்றும் விவசாயிகள் பங்கேற்ற கூட்டம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. ஏற்கனவே நிலத்தில் குழாய் பதிக்கப்பட்டதற்கு குறைந்த அளவே இழப்பீடு வழங்கப்பட்டது. தற்போது, 20 சதவீதம் மட்டுமே வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதை ஏற்க முடியாது. நிலத்துக்கு ஏற்றார் போல், விவசாயிகளுக்கு வாடகை நிர்ணயித்து வழங்க வேண்டும்,' என, கட்சி சார்பற்ற தமிழக விவசாய சங்க நிர்வாகிகள் கணேசன், ரவிக்குமார் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ