உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாததால் அச்சம்

கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாததால் அச்சம்

வால்பாறை;வால்பாறை நகரில் உலா வரும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை நகரில், சமீப காலமாக கால்நடைகள் அதிக அளவில் ரோட்டில் உலா வருகின்றன. ரோட்டில் ஏற்கனவே ஆக்கிரமிப்பு கடைகளாலும், சாலையோரம் வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும் மக்கள் நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.இந்நிலையில், சமீப காலமாக கால்நடைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதால், மக்கள் ரோட்டில் நடந்து செல்ல முடியாமலும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கால்நடைகளால் விபத்துக்குள்ளாகி வருவதும் வாடிக்கையாகி விட்டது.மக்கள் கூறியதாவது:வால்பாறையில், பொள்ளாச்சி மெயின் ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுதவிர, சுற்றுலா வாகனங்கள் அதிக அளவில் வருவதால் மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.இந்நிலையில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக கால்நடைகள் நடமாடுவதால் மக்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றனர். கால்நடைகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை