உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஷோரூமில் தீ விபத்து; கார்கள் எரிந்து நாசம்

ஷோரூமில் தீ விபத்து; கார்கள் எரிந்து நாசம்

சூலுார் : சூலுாரில் கார் ஷோரூமில் ஏற்பட்ட தீ விபத்தில், 12 கார்கள் தீயில் எரிந்து நாசமாகின.சூலுார் அடுத்த ரங்கநாத புரத்தில் திருச்சி ரோட்டை ஒட்டி, பிரவீன் குமார் என்பவருக்கு சொந்தமான கார் ஷோரூம் உள்ளது. இங்கு, கார் விற்பனை, சர்வீஸ் பணிகளும் நடக்கின்றன.நேற்று முன்தினம் இரவு, பணிகள் முடிந்த பின், ஷோரூம் பூட்டப்பட்டது. இரவு காவலர் பணியில் இருந்தார். நேற்று அதிகாலை, 3:00 மணி அளவில் ஷோரூமில் இருந்து கரும்புகை வெளிவந்து தீப்பிடித்து. தீ மள மளவென அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. இதில், சர்வீசுக்கு வந்த கார்கள் உட்பட, 12 கார்கள் தீயில் கருகின. ஆனால் எத்தனை கார்கள் தீயில் எரிந்தன என்ற உறுதியான தகவல் இல்லை.அக்கம்பக்கத்தினர் சூலுார் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் வந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இதனால், பல கார்கள் தப்பின. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி