உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நகராட்சி பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

நகராட்சி பள்ளியில் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சி பள்ளியில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் தீ தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பொள்ளாச்சி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மற்றும் கிழக்கு போலீசார் சார்பில், தீ தடுப்பு மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.கிழக்கு எஸ்.ஐ.,க்கள் கிருஷ்ணமூர்த்தி, பிரியதர்ஷினி ஆகியோர், மாணவியர், பெற்றோரை தவிர்த்து மற்றவர்களிடம் எந்த முறையில் பழக வேண்டும்; பாதுகாப்பாக இருப்பது குறித்தும், மொபைல்போன் பயன்பாடு நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.தொடர்ந்து, தீயணைப்பு நிலை அலுவலர் கணபதி தலைமையில், தீயணைப்பு வீரர்கள், தீ விபத்து நேரிடும் போது, தங்களை பாதுகாக்க எப்படி நடந்து கொள்வது என விளக்கினர்.உயரமான பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டால் அங்கு இருந்து எவ்வாறு தப்பிப்பது, பாதுகாப்பு உபகரணங்கள் வாயிலாக, பத்திரமாக கீழே இறங்குவது, தீக்காயம் ஏற்பட்டவர்களுக்கு முதலுதவி அளிப்பது, எரியும் தீயை எவ்வாறு அணைப்பது என்பது குறித்து செயல்விளக்க பயிற்சி அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை