உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதலாமாண்டு துவக்க விழா

முதலாமாண்டு துவக்க விழா

பொள்ளாச்சி : பூசாரிப்பட்டியிலுள்ள, பொள்ளாச்சி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், வணிகவியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பு துவக்க விழா மற்றும் நோக்கு நிலைப்பயிலரங்கம் நடந்தது.கல்லுாரிச் செயலாளர் அருள்மொழி தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் கண்ணன் அனைவரையும் வரவேற்றார். தாளாளர் மகேந்திரன் வாழ்த்திப் பேசினார். ஹிந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாகி கருணாகரன், வக்கீல் கலையமுதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.வணிகவியல் துறைத் தலைவர் சபரிநாதன், பேராசிரியர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். உதவிப் பேராசிரியர் நீலவேணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்