உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவையில் கடந்த வாரத்தை விட மீன்களின் விலை சற்று குறைவு

கோவையில் கடந்த வாரத்தை விட மீன்களின் விலை சற்று குறைவு

கோவை;கோவையில், கடந்த வாரத்தை விட மீன்களின் விலை சற்று குறைந்திருந்தது.தமிழகத்தில், மீன்பிடி தடைகாலம் 61 நாட்களுக்கு பின், கடந்த 14ம் தேதி நிறைவடைந்தது. மீன்கள் பிடிக்கும் பணியில், மீனவர்கள் ஈடுபட துவங்கியுள்ளனர்.இந்நிலையில், கோவையில் நேற்று மீன்களின் விலை, கடந்த வாரத்தை விட சற்று குறைந்திருந்தது. கடந்த வாரம், மொத்த மார்க்கெட்டில், 25 கிலோ கொண்ட மத்தி மீன் பெட்டிக்கு, ரூ.7,000 முதல் 7,500 வரை விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், நேற்று, 6,000 முதல் 6,500 ரூபாய் வரை விலை நிர்ணயிக்கப்பட்டது.நகர் பகுதிகளில், ஒரு கிலோவுக்கு ரூ.300 வரையும், சில புறநகர் பகுதிகளில், ரூ.350 வரையும் மத்தி மீன்கள் விற்பனை செய்யப்பட்டன.வஞ்சிரம், செம்மீன், மஞ்சள்பாறை, சங்கரா, விளாமீன், ஓரான் உட்பட மீன்களின் விலை, கடந்த வாரத்தை விட குறைந்திருந்தது.இதுகுறித்து, கோவை மாவட்ட மீன் வியாபாரிகள் சங்க பொது செயலாளர் காதர் கூறுகையில், ''மத்தி மீன்களின் வரத்து, கடந்த வாரத்தை விட அதிகரித்துள்ளது. மற்ற மீன்களின் விலை ஓரளவுக்கு குறைந்துள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ