உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விஜயகாந்த் பிறந்தநாள் விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானம்

விஜயகாந்த் பிறந்தநாள் விழாவில் பொதுமக்களுக்கு அன்னதானம்

கோவை:கோவையில், தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் ரோடு பகுதியில் நடந்த நிகழ்ச்சியில், கட்சி நிர்வாகி ஒருவரின் குழந்தைக்கு, 'விஜயபிரபாகரன்' என பெயரிட்டு, தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. விஜயகாந்த் உருவப்படத்துக்கு, திரளான பொதுமக்கள், மலர் துாவி மரியாதை செலுத்தினர்.கட்சி நிர்வாகிகள் கூறுகையில், 'அவர் மறைந்தாலும், எங்கள் மனதில் இன்னமும் வாழ்கிறார். இனிமேல், 'கேப்டன் ஜெயந்தி' என்ற பெயரில், அவரது பிறந்தநாளின் போது, பொதுமக்களுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கவிருக்கிறோம். ஒவ்வொரு வியாழனன்றும், அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள், உறவினர்களுக்கு, குறைந்தபட்சம் 100 முதல் 150 பேருக்கு அன்னதானம் வழங்கி வருகிறோம். இப்பணி தொடரும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை