உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகராட்சிகளுக்கு தனியாக நிர்வாக இயக்குனர் ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை முன்வைப்பு

மாநகராட்சிகளுக்கு தனியாக நிர்வாக இயக்குனர் ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை முன்வைப்பு

கோவை:அனைத்து மாநகராட்சிகளுக்கும் தனியாக மாநகராட்சி நிர்வாக இயக்குனர் என்ற புதிய பதவியை உருவாக்குமாறு ஆலோசனைக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு புதிய விதிகள் கடந்த, 2023ம் ஆண்டு ஏப்., 13 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. இப்பணி விதிகளில் திருத்தம் செய்யுமாறு மாநகராட்சி, நகராட்சி பணியாளர்கள் கோரிக்கைவிடுத்து வருகின்றனர்.இந்நிலையில், இப்புதிய விதிகளில் திருத்தங்கள் மற்றும் கூடுதலாக விதிகள் சேர்ப்பது தொடர்பாக, அனைத்து மாநகராட்சி, நகராட்சி பணியாளர்கள் சங்க பிரதிநிதிகளுடன் சென்னையில் நகராட்சி நிர்வாக இயக்குனர் சிவராசு நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.இதில், தமிழ்நாடு மாநகராட்சி அமைச்சுப் பணியாளர் சங்கம் சார்பில் நிறுவனர் தலைவர் சுப்ரமணியன், இணைச் செயலாளர் குமரேஷ் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை முன்வைத்தனர்.நகராட்சி நிர்வாக இயக்குனரிடம் அவர்கள் அளித்த மனுவில்,'தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின்படி, நியமன அரசு அதிகாரியாக அரசு, நகராட்சி நிர்வாக இயக்குனர் மற்றும் கமிஷனர் என குறிப்பிட்டுள்ள நிலையில், பொதுப்பணி குழு பரிசீலித்து தேர்வு செய்த பின்னர், நகராட்சி நிர்வாக இயக்குனர் வாயிலாக அரசின் ஒப்புதலை பெறவேண்டும் என குறிப்பிட்டுள்ளதை நீக்கி விதித்திருத்தம் செய்ய வேண்டும்.அனைத்து மாநகராட்சிகளுக்கும் தனியாக மாநகராட்சி நிர்வாக இயக்குனர் என்ற புதிய பதவியை உருவாக்கி, அவருக்கு கீழ் புதிய இயக்குனரகம் தோற்றுவிக்க தக்க விதித்திருத்தம் வெளியிட வேண்டும். மாநகராட்சி துணை கமிஷனர் பதவியில் வருவாய் துறையை சேர்ந்த மாவட்ட வருவாய் அலுவலரை அயற்பணி அடிப்படையில் நியமிக்க வகை செய்யப்பட்டுள்ளது.ஆனால், மாநகராட்சி பணியில் உள்ளவர்களை வருவாய் துறையில் உள்ள பதவிகளில் நியமிக்க வகை செய்யப்படவில்லை. எனவே, இவ்விதியினை நீக்கம் செய்ய வேண்டும். விதித்திருத்தம் தொடர்பான எங்களது, 50 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்' என, தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ