மேலும் செய்திகள்
ஆண்டிப்பட்டியில் இலவச கண் பரிசோதனை முகாம்
24-Feb-2025
அன்னுார்; வடக்கலுாரில் நடந்த முகாமில், 68 பேருக்கு, கண் சிகிச்சை அளிக்கப்பட்டது.வடக்கலுார், சமுதாய நலக்கூடத்தில், நேற்று முன்தினம், கண் சிகிச்சை இலவச முகாம் நடந்தது.முகாமில், துாரப்பார்வை, கண் புரை, கண்ணில் நீர் அழுத்தம், நீர்ப்பை அடைப்பு, பார்வை குறைபாடு உள்ளிட்ட கண் நோய்களுக்கு, 68 பேருக்கு, பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்பட்டது. 20 பேர் அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.அறுவை சிகிச்சை, தங்குமிடம், உணவு, பஸ் வசதி என அனைத்தும் இலவசமாக செய்து தரப்பட்டன. சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் ஒவ்வொரு ஆண்டும் கண் பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டது.கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், வடக்கலுார் நேரு இளைஞர் நற்பணி மன்றம், சிறுமுகை லயன்ஸ் கிளப், மேட்டுப்பாளையம் இம்மானுவேல் கண் நோய் நிவாரண குழு இணைந்து முகாமை ஏற்பாடு செய்திருந்தன.
24-Feb-2025