காந்திமாநகர் அரசுப்பள்ளி மாணவர்கள் சாதனை
கோவை; தமிழக அரசின் கல்வி இணை செயல்பாடுகள் திட்டத்தில், கோவை காந்திமாநகர் அரசு உயர்நிலை பள்ளி மாணவர்கள், மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றி பெற்று, 'ஹாட்ரிக்' சாதனை படைத்துள்ளனர்.கல்வி இணை செயல்பாடுகள் போட்டியில், மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களை, வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்லும் திட்டத்தை, தமிழக அரசு அறிவித்துள்ளது.இத்திட்டம் தொடங்கிய மூன்று ஆண்டுகளிலும், தொடர்ந்து காந்திமாநகர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.இந்த கல்வியாண்டில், இப்பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவர் ஸ்ரீவிஷ்ணு, இலக்கிய மன்றம் போட்டியில் ஆங்கில பேச்சு பிரிவில், மாநில அளவில் தேர்வு பெற்று, வெளிநாடு கல்விச் சுற்றுலா செல்ல, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி கூறுகையில், ''கல்வி இணை செயல்பாடுகள் திட்டம் துவங்கப்பட்ட, இந்த மூன்று ஆண்டுகளிலும் எங்கள் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ''இது ஒரு 'ஹாட்ரிக்' சாதனை. இப்போட்டியின் வழிகாட்டியாக இருந்த ஆசிரியர் ரோஸ்லின் கிறிஸ்டல் செல்விக்கும், மாணவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்,'' என்றார்.