கஞ்சா விற்றவர்கள் கைது
கோவை:கோவையில் கஞ்சா விற்பனை, அதிகமாக உள்ளது. போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், வடவள்ளி போலீசார் ரோந்து சென்றபோது, சிறுவாணி சாலையில் சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்த மூவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் பி.என். புதுாரை சேர்ந்த சஞ்சய், 21, மருதமலையை சேர்ந்த சக்திவேல், 30 மற்றும் கேரளாவை சேர்ந்த சினோஜ், 33 என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்து, மூவரையும் கைது செய்தனர்.