உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோடை உழவுக்கு தயார் ஆகலாம்: காலநிலை ஆய்வு மையம் தகவல்

கோடை உழவுக்கு தயார் ஆகலாம்: காலநிலை ஆய்வு மையம் தகவல்

பொள்ளாச்சி;கோவைமாவட்டத்தில்,வரும் ஐந்து நாட்கள் வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை பகல் நேரத்தில், 38-39 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை இரவில், 23-24 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கும் என, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.வரும் ஐந்து நாட்கள் வெப்பம்அதிகம்நிலவும் என்பதால், மதிய நேரங்களில் வெளியில் செல்வதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். பகல் பொழுதில் வெப்பம் அதிகரிப்பதாலும், காற்றின் ஈரப்பதம் குறைவதாலும், மண்ணின் ஈரத்தை பொறுத்து நீர் பாசனம் செய்ய வேண்டும்.நீர் பாசனத்திற்கு குறைந்த அளவு தண்ணீர் இருக்கும் இடங்களில் மண் மூடாக்கு செய்ய வேண்டும். உயர்ந்து வரும் வெப்பநிலை காரணமாக, மாலை வேளைகளில் கோடை மழையுடன் இடியும், மின்னலும் சேர்ந்து வரக்கூடும்.விவசாயிகள் கோடை உழவுக்கு தயாராக இருக்க வேண்டும். மதியம் 2:00 முதல் 3:00 மணி வரை உள்ளூர் பகுதிகளில், சுழற்காற்று ஏற்படவாய்ப்புள்ளது. இதனால், ஐந்து மாத வயதுடைய வாழை மரங்களுக்கு, முட்டுகொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்