உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஜி.கே.என்.எம்., 72-வது நிறுவனர் தின விழா

ஜி.கே.என்.எம்., 72-வது நிறுவனர் தின விழா

கோவை;ஜி.கே.என்.எம்., மருத்துவமனையின், 72வது நிறுவனர் தின விழா, முன்னாள் நிறுவனர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கொண்டாடப்பட்டது.கோவையில் கடந்த, 70 ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவ சேவை அளித்து வரும் இந்நிறுவனம், கடந்த, 1952ம் ஆண்டு துவங்கப்பட்டது. 72வது நிறுவனர் தின விழா கடந்த, 29ம் தேதி மணி மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.இதில், சேவை விருதுகள், செயல்திறன் சிறப்பு விருதுகள், மெரிட்டோரியஸ் சர்வீஸ் விருதுகள், தகுதியானவர்களுக்கு வழங்கப்பட்டன.நிகழ்வில், மருத்துவமனையின் முதன்மை செயல் அலுவலர் ரகுபதி வேலுசாமி, குப்புசாமி நாயுடு அறக்கட்டளையின் தலைவர் பதி, துணைத்தலைவர் கோபிநாத், தலைமை மருத்துவ அதிகாரி மனோகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ