கோ-கோ விளையாட்டு போட்டி என்.ஜி.ஆர்., பள்ளி பாய்ச்சல்
கோவை;பள்ளிகளுக்கு இடையேயான கோ கோ போட்டியில், தியாகி என்.ஜி.ஆர்., பள்ளி அணி முதலிடம் பிடித்தது.துடியலுார் அருகே புனித ஜான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பள்ளிகளுக்கு இடையேயான முதலாவது கோ கோ போட்டிகள் இரு நாட்கள் நடந்தன. இதில், 54 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.இறுதிப்போட்டியில், மாணவர்கள் பிரிவில், தியாகி என்.ஜி.ஆர்., பள்ளி அணி, 4-2 என்ற புள்ளி கணக்கில், புனித ஜான் போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை வென்று, முதலிடம் பிடித்தது.டி.கே.எஸ்., பள்ளி, 7-6 என்ற புள்ளி கணக்கில், மதுக்கரை பிருந்தாவன் பப்ளிக் பள்ளியை வென்று மூன்றாம் இடம் பிடித்தது.மாணவியர் பிரிவில் சுகுணா பிப் பள்ளி, 8-5 என்ற புள்ளி கணக்கில், விவேக் வித்யாலயா பள்ளியை வென்று முதலிடம் பிடித்தது.தியாகி என்.ஜி.ஆர்., பள்ளி, 5-2 என்ற புள்ளி கணக்கில் கவுண்டம்பாளையம் மாநகராட்சி ராமசாமி பள்ளியை வென்று, மூன்றாம் இடம் பிடித்தது. இதில், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.