உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு வழங்கிய தள்ளுவண்டிகள் ரோட்டோரத்தில் முடங்கின

அரசு வழங்கிய தள்ளுவண்டிகள் ரோட்டோரத்தில் முடங்கின

பொள்ளாச்சி;பொள்ளாச்சி நகராட்சியில், சாலையோர வியாபாரிகளுக்கான ஆதரவு திட்டத்தில் வழங்கப்பட்ட தள்ளுவண்டிகள் பயன்பாட்டின்றி ரோட்டோரம் காட்சிப்பொருளாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர்.மத்திய அரசின் தீனதயாள் அந்தியோதயா யோஜனா என்ற, தேசிய நகர் புற வாழ்வாதார இயக்கம் சார்பில், சாலையோர வியாபாரிகளுக்கான ஆதரவு திட்டத்தில், தள்ளுவண்டிகள் கடந்தாண்டு வழங்கப்பட்டன.அவை, பொள்ளாச்சி நகராட்சி வாயிலாக, சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், பொள்ளாச்சி திரு.வி.க., மார்க்கெட் அருகே இரண்டு தள்ளுவண்டிகள் பயன்பாடின்றி மண் புழுதியோடு கிடக்கிறது.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:சாலையோர வியாபாரிகளுக்கான பாதுகாப்பு திட்டத்தில் வழங்கப்பட்ட தள்ளுவண்டிகளை, வழங்கும் போதே முறையாக வழங்கவில்லை. ஆளுங்கட்சியினருக்கு ஆதரவான சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.இந்நிலையில், வழங்கப்பட்ட தள்ளுவண்டியை சிலர் பல நாட்களாக பயன்படுத்தாமல் ரோட்டோரத்தில் நிறுத்தியுள்ளனர். அங்குள்ள கடைக்காரர்கள் மாற்று பயன்பாடுக்கு பயன்படுத்துகின்றனர். காட்சிப்பொருளாக இருக்கும் தள்ளுவண்டிகளை தேவையானோருக்கு வழங்க வேண்டும். அப்போது தான், அரசின் திட்ட நிதி வீணாகாது.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை