குறுமைய போட்டிகளில் அரசு பள்ளி அசத்தல்
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் குறுமைய போட்டிகளில், வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள் வாலிபால் மற்றும் எறிபந்து போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தினர்.மேட்டுப்பாளையம் சிறுமுகை சாலையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில், மேட்டுப்பாளையம் குறுமைய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில் வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்கள் 14 மற்றும் 17 வயதிற்கு உட்பட்ட பிரிவில், வாலிபால் போட்டியில் முதலிடம் பெற்று வாகை சூடினர். இதே போல் மாணவிகள் எறிபந்து போட்டியில் 14 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட பிரிவில் முதலிடம் பெற்று வாகை சூடினர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும்,உடற்கல்வி ஆசிரியர் ராஐகுமார், உடற்கல்வி ஆசிரியை தனுஷியா ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியர் சாக்ரடீஸ் குலசேகரன், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் ராம்தாஸ் ஆகியோர் பாராட்டினர்.---