உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பேரூர் தமிழ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

பேரூர் தமிழ் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

தொண்டாமுத்தூர்;பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரியில், பட்டமளிப்பு விழா நேற்று கல்லூரி அரங்கத்தில் நடந்தது. இதில் கல்லூரி முதல்வர் சேதுராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரி கல்வி சார் இயக்குனர் சரவணசெல்வன் வரவேற்றார். பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார் தலைமை வகித்தார். வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டமளித்து சிறப்பித்தார்.இளங்கலை மாணவர்கள், 202 பேருக்கும், முதுகலை மாணவர்கள், 23 பேருக்கும், எம்.பில்., மற்றும் பி.ஹெச்டி., மாணவர்கள் நான்கு பேருக்கும், சமுதாய கல்லூரி மாணவர்கள் 75 பேருக்கும், திருநங்கைகள் இரண்டு பேரும் என, மொத்தம் 306 மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ