உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வட்ட வழங்கல் அலுவலகங்களில் வரும் 8ம் தேதி  குறைதீர் கூட்டம்

வட்ட வழங்கல் அலுவலகங்களில் வரும் 8ம் தேதி  குறைதீர் கூட்டம்

கோவை; கோவையிலுள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும், வரும் 8ம் தேதி பொதுவினியோகத்திட்ட குறைதீர்ப்புக்கூட்டம் நடைபெறவுள்ளது.இது குறித்து, கலெக்டர் பவன்குமார் அறிக்கை: அரசின் பொதுவினியோகத்திட்டத்தின் சேவைகளை, அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் பொருட்டு, மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமையன்று, கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் செயல்படும், வட்ட வழங்கல் அலுவலகங்களில், சிறப்பு குறைதீர் முகாம் நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, வரும் 8ம் தேதி காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை, பொதுவினியோகத்திட்ட குறைதீர் சிறப்பு முகாம், அனைத்து தாசில்தார் அலுவலகங்களில் உள்ள, வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறும்.இம்முகாமில் ரேஷன்கார்டில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, முகவரி மாற்றம் செய்வது, ரேஷன்கார்டு நகல் பெறுவது, மொபைல் எண் மாற்றம் செய்வது, குடும்பத்தலைவர் போட்டோ மாற்றுவது உள்ளிட்ட குறைகளை, மனுக்களாக வழங்கி மக்கள் பயனடையலாம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை