மேலும் செய்திகள்
அடிதடி குற்றவாளி மீது பாய்ந்தது குண்டாஸ்
27-Aug-2024
அடிதடி குற்றவாளி மீது பாய்ந்தது குண்டாஸ்
27-Aug-2024
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், போதைக்காக, டாக்டர் பரிந்துரை சீட்டின்றி, வலி நிவாரண மாத்திரைகளை விற்ற நபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.பொள்ளாச்சியில், டாக்டர் பரிந்துரை சீட்டின்றி, போதைக்காக, வலி நிவாரண மாத்திரைகள் விற்றதன் பேரில், சூளேஸ்வரன்பட்டியைச்சேர்ந்த பாஸ்கரன் என்ற சுதாகரனை, 45, கிழக்கு போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.அவர், மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, கோவை எஸ்.பி., கார்த்திகேயன், கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமாருக்கு பரிந்துரை செய்தார்.அதன்பேரில், சுதாகரனை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். சிறையில் உள்ள அவரிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான நகல், சிறைத்துறை அதிகாரி வாயிலாக வழங்கப்பட்டது.இந்நிலையில், கோவை மாவட்டத்தில், நடப்பாண்டு, இதுவரை, 12 கஞ்சா வழக்குகள் உட்பட 46 நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதுபோன்ற குற்ற செயலில் ஈடுபடும் நபர்கள் குறித்து, 94981 -81212 மொபைல்போன் எண், 7708-1 00100 வாட்ஸ்ஆப் எண்ணில் போலீசாரை தொடர்பு கொள்ளலாம் என, எஸ்.பி., தெரிவித்துள்ளார்.
27-Aug-2024
27-Aug-2024