மேலும் செய்திகள்
ஆவடியில் 31 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'
27-Aug-2024
கோவை;தொண்டாமுத்துாரை சேர்ந்த பழனிசாமி மகன் கார்த்திகேயன் என்கிற மொட்டை கார்த்தி,39. இவர் அடிதடி மற்றும் குற்றங்களை தொடர்ந்து செய்து வந்துள்ளார். இந்நிலையில், தொண்டாமுத்துார் பகுதியை சேர்ந்த சத்யநாராயணன், 37 என்பவரை குடிபோதையில் தாக்கியுள்ளார். தொண்டாமுத்துார் போலீசார், அடிதடி வழக்கில் கார்த்திகேயனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.மாவட்ட எஸ்.பி., பரிந்துரையின்படி, கலெக்டர் கிராந்தி குமார், கார்த்திகேயனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.இந்த வருடத்தில் இதுவரை, கோவை மாவட்டத்தில், 47 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; நடவடிக்கை தொடரும் என, எஸ்.பி., எச்சரித்துள்ளார்.தங்கள் பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து, காவல்துறைக்கு 94981 81212, 'வாட்ஸ் ஆப்' எண் 77081 00100 ஆகிய எண்களில் தகவல் தெரிவிக்கலாம்.
27-Aug-2024