உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பி.பி.ஜி., கல்லுாரி சார்பில் ஹேண்ட்பால் போட்டி

பி.பி.ஜி., கல்லுாரி சார்பில் ஹேண்ட்பால் போட்டி

கோவை:பி.பி.ஜி., நர்சிங் கல்லுாரியின் உடற்கல்வித்துறை, கோவை மாவட்ட ஹேண்ட்பால் சங்கம் சார்பில் 'ஹேண்ட்பால் பெஸ்ட் 2024' என்ற, மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டி, சரவணம்பட்டியில் உள்ள பி.பி.ஜி., கல்லுாரி வளாகத்தில் நடந்தது. போட்டியை, பி.பி.ஜி., குழும துணை தலைவர் அக்சய், செயல் இயக்குனர் அமுதகுமார், கோவை மாவட்ட ஹேண்ட்பால் சங்க தலைவர் ஜான் சிங்கராயர் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 35 பள்ளி அணிகள் பங்கேற்றன. மாணவ - மாணவியருக்கு 17 மற்றும் 19 ஆகிய வயது பிரிவுகளின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன.

நாக் அவுட் சுற்று முடிவுகள்

மாணவர் 19 வயது பிரிவில் நேஷனல் மாடல் பள்ளி அணி, 18 - 8 என்ற கோல் கணக்கில் டிரினிட்டி பள்ளியையும், ஜி.கே.டி., பள்ளி அணி 20 - 10 என்ற கோல் கணக்கில், பி.வி.பி., பள்ளியையும் வீழ்த்தின. மாணவியர் 17 வயது பிரிவில், ஆர்.கே.வி., பள்ளி அணி 4 - 1 என்ற கோல் கணக்கில் பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் பள்ளியையும், சாவரா வித்யா பவன் பள்ளி அணி 9 - 1 என்ற புள்ளிக்கணக்கில், ஜி.கே.டி., பள்ளியையும் வீழ்த்தின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை