உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில்  கைத்தறி தின கண்காட்சி 

மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில்  கைத்தறி தின கண்காட்சி 

கோவை- கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில், கைத்தறி தினத்தை முன்னிட்டு ஆடை தொழில்நுட்பத்துறையின் சார்பில், கைவினை பொருட்கள் கண்காட்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வை, கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை வகித்து துவக்கிவைத்தார். இதில், மாணவிகள் பங்கேற்று, நுாலினால் தயாரிக்கப்பட்ட வளையல்கள், களிமண்ணால் செய்யப்பட்ட நகைகள், சணலில் தயாரிக்கப்பட்ட அலங்கார பொருட்கள், கைத்தறி பொருட்கள் போன்றவை கண்காட்சியில் பார்வைக்கும் விற்பனைக்கு வைக்கப்பட்டன. மெஹந்தி போடுதல், உருவங்களை தத்ரூபமாக வரைதல் போன்றவற்றிலும் சில மாணவிகள் ஈடுபட்டு இருந்தனர். இதில், அனைத்து துறை பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ