உள்ளூர் செய்திகள்

கையெழுத்து இயக்கம்

போத்தனூர்; கோவை தெற்கு வளர்ச்சி கூட்டமைப்பின் கூட்டம், தனியார் கல்லூரி வளாகத்திலுள்ள அலுவலகத்தில் நடந்தது. இதில், போத்தனூர், ஸ்ரீராம் நகர் அருகே பாதியில் நிறுத்தப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் பணியை தொடரவேண்டும். குப்பை கழிவு கொட்டுவதை நிறுத்த வேண்டும். இவற்றை வலியுறுத்தி மக்களிடம் கையெழுத்து பெற்று, முதல்வருக்கு அனுப்புவது.இதனை ஸ்ரீராம் நகர் பகுதியில் கூட்டம் நடத்தி, அங்கிருந்து துவக்கவும் முடிவு செய்யப்பட்டது. நிர்வாகிகள் தீபம் சாமினாதன், லட்சுமி நாராயணன், பசுமை தேசம் இயக்க நிறுவனர் ராஜேந்திரன், குறிச்சி - வெள்ளலூர் மாசு தடுப்பு கூட்டுக்குழு செயலாளர் மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை