உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை, திருப்பூர், நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை

கோவை, திருப்பூர், நீலகிரிக்கு கனமழை எச்சரிக்கை

கோவை:வரும், 19ம் தேதி கோவை, திருப்பூர், நீலகிரியில் மிக கனமழை பெய்யும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அனைத்து துறைகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கோடை மழை பெய்து வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும், கனமழை உள்ளது. இந்நிலையில், அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.நேற்று இரவு முதல் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கனமழை வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை மற்றும் நாளை மறுதினம், மே, 17, 18ல் கோவை, திருப்பூர், நீலகிரியில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், வரும், 19ம் தேதி கோவை, திருப்பூர், நீலகிரியில், கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து துறைகளும் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ