உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மதிப்பு மிக்க மனிதர்களாக வாழ உயர்கல்வி அவசியம்! கோவை மாவட்ட கலெக்டர் பேச்சு

மதிப்பு மிக்க மனிதர்களாக வாழ உயர்கல்வி அவசியம்! கோவை மாவட்ட கலெக்டர் பேச்சு

பொள்ளாச்சி;''சமுதாய மதிப்பு மிக்க மனிதர்களாக வாழ உயர்கல்வி அவசியமாகும்,'' என, பொள்ளாச்சியில் நடந்த உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியில், கோவை மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.பள்ளி கல்வித்துறை, 'நான் முதல்வன் - கல்லுாரி கனவு' என்ற தலைப்பில், பிளஸ் 2 பயின்ற மாணவர்களுக்கான உயர் கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி, பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில் நடந்தது. சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா, டி.எஸ்.பி., ஸ்ரீநிதி, கல்லுாரி செயலாளர் ராமசாமி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி ஆகியோர் பேசினர்.ரூட்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவன இயக்குனர் கவிதாசன், மாவட்ட கல்வி அலுவலர்கள் கேசவகுமார், வள்ளியம்மாள், பாரதியார் பல்கலை விரிவாக்கம் தொழில் வழிகாட்டுதல் துறை பேராசிரியர்கள் முனைவர் கவுதம், சத்யா உள்ளிட்டோர் பேசினர்.மாணவர்களுக்கான கல்லுாரி கனவு வழிகாட்டு கையேடுகளை வழங்கி, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது: அரசுப்பள்ளிகளில், பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் அனைவரும் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்வதை, 100 சதவீதம் உறுதி செய்யும் பொருட்டு, நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டத்தின் கீழ், மாணவ, மாணவியர் விருப்பமான கல்லுாரிகளில் சேர உதவும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அரசுப்பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து, உயர்கல்வி பயிலும் மாணவயிருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.பிளஸ் 2 உடன் படிப்பை நிறுத்தினால், பல்வேறு தவறான பாதைக்கு செல்ல வாய்புள்ளது. வருங்காலத்தில் அறிவுமிக்கவர்களாகவும், சமுதாய மதிப்பு மிக்க மனிதர்களாக வாழ உயர்கல்வி அவசியமாகும். எனவே, பள்ளி படிப்பை முடித்த அனைவரும், உயர்கல்வி பயில வேண்டும்.கல்லுாரி படிப்பதற்கு பெற்றோரை விட்டு வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய சூழல் உருவாகும். அந்த சூழலை தகுந்தவாறு உங்களை மாற்றிக்கொண்டு கல்லுாரி படிப்பை சிறப்பாக மேற்கொண்டால் வெற்றி அடையலாம்.இந்த நிகழ்ச்சியில், துறை சார்ந்த வல்லுனர்கள் வாயிலாக, உயர்கல்வி பயில்வதற்கு தேவையான ஊக்குவிப்பும், வழிகாட்டுதலும் வழங்கப்படுகின்றது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு, உயர்கல்வியை சிறப்பான முறையில் கற்று உயர்நிலையை அடைய வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை