உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இந்துஸ்தான் மருத்துவமனை புதிய கிளை திறப்பு

இந்துஸ்தான் மருத்துவமனை புதிய கிளை திறப்பு

கோவை:இந்துஸ்தான் மருத்துவ மனையின் புதிய கிளை திறக்கப்பட்டது.இந்துஸ்தான் மருத்துவமனையின் கிளை கோவை மேட்டுப்பாளையம் அருகில் உள்ள வி.ஐ.பி., நகரில் நேற்று புதியதாகத் துவங்கப்பட்டது. துவக்க விழாவில் மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் சதீஷ் பிரபு அனைவரையும் வரவேற்றார்.இந்துஸ்தான் நிறுவனங்களின் தலைவர் கண்ணையன், நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி முன்னிலை வகித்தனர். ஐ.எம்.ஏ.,வின் தலைவர் டாக்டர் இஸ்மாயில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மருத்துவமனையின் புதிய கிளையைத் திறந்து வைத்தார்.அப்போது அவர் பேசுகையில், குறைந்த கட்டணத்தில் சிறந்த மருத்துவ வசதிகள் கிடைக்கும் இடமாக இந்த மருத்துவமனை அமையும். பல சிறப்பு உபகரணங்கள், மருத்துவ உட்பிரிவுகள், அவசரச் சிகிச்சை பிரிவுகள், மகளிர் நலன், குழந்தைகள் நலன் என அனைத்து வசதியும் கொண்டு இந்த மருத்துவமனை வடிவமைக்கப்பட்டுள்ளது, என்றார்.டாக்டர்கள் சரவணன் சக்திவேல், விவேக் பொன்னுச்சாமி ஆகியோர் நன்றியுரை வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ