மேலும் செய்திகள்
கோயம்பேடு சந்தைக்கு திராட்சை வரத்து அதிகரிப்பு
26-Jan-2025
கோவை; மாமரங்களில் பூக்கள் வரத் துவங்கியுள்ள நிலையில், தேன்பூச்சிகளின் தாக்குதல் அதிகமாக இருப்பதால் சாகுபடி பாதிக்கப்படுவதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.கோவை சந்தைக்கு சேலம், புளியம்பட்டி, பொள்ளாச்சி, திண்டுக்கல், பழனி, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து செந்துாரம், மல்லிகா, அல்போன்சா, இமாம்பசந்த், கிளிமூக்கு உள்ளிட்ட பிரபலமான 15 வெரைட்டி வரத்து அதிகரித்துள்ளன. கோவை உக்கடம் சந்தையில் தினந்தோறும் மாலை, 4:00 மணியளவில் ஏலம் விடப்பட்டு, பிற மாநில வியாபாரிகள் மாம்பழங்களை கொள்முதல் செய்து செல்கின்றனர்.இதில், பங்கேற்ற விவசாயி நாகராஜ் கூறுகையில், '' மாம்பழங்களில் வெள்ளை ஈக்கள், தேன் பூச்சிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளன. தேன் பூச்சிகள் தாக்குதல் ஏற்படும் இடங்கள் கருத்துப்போவதால், பழங்கள் அழுகி பயனின்றி போகிறது. 4 ஏக்கருக்கு சுமார், 15,000 ரூபாய் மருந்துகளுக்கே செலவிடவேண்டியுள்ளது. அதுவும், 8-9 நாட்களுக்கு ஒரு முறை மருந்து தெளிக்கவேண்டியுள்ளது. முன்பெல்லாம், 2-3 மருந்துகள் தெளித்தோம். தற்போது, பூச்சிகளை கட்டுப்படுத்த 15 வகையான மருந்துகளை தெளிக்கவேண்டியுள்ளது. 1 டன் சாகுபடியில் 300 -400 கிலோ பழங்கள் மட்டுமே விற்பனை செய்ய முடிகிறது. பிற பழங்கள் வீணாகின்றன. அரசு மற்றும் வேளாண் பல்கலை உரிய தீர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும். சாகுபடி நன்றாக இருந்தும் விவசாயிகளுக்கு பலன் இன்றியுள்ளது,'' என்றார்.தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் கந்தசாமி கூறுகையில், ''மாமரங்களில் பூக்கள் வரத்துவங்கியது முதல் பூச்சிகள் தாக்குதல் தொடர்ந்து இருக்கின்றன.'' பூச்சி மருந்து அடிக்க வேண்டாம் என அறிவுறுத்துகின்றனர். ஆனால், விவசாயிகளாகிய நாங்கள் அதை கட்டுப்படுத்த என்ன செய்யவேண்டும் என மாற்று வழி யாரும் சொல்வதில்லை. தற்போது, மாம்பழ சீசன் என்பதால், விவசாயிகள் பாதிக்காத வகையில், உரிய தீர்வு வழங்கவேண்டும். அல்லது, மருந்து செலவினங்களை கணக்கிட்டு ஒரு ஏக்கருக்கு இழப்பீடு நிர்ணயித்து விவசாயிகளுக்கு வழங்கவேண்டும், '' என்றார்.
26-Jan-2025