உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதல் முறை ஓட்டுப்போட்ட அனுபவம் எப்படி? இளையதலைமுறையினர் சிலிர்ப்பு

முதல் முறை ஓட்டுப்போட்ட அனுபவம் எப்படி? இளையதலைமுறையினர் சிலிர்ப்பு

நேற்று நடந்த லோக்சபா தேர்தலில், முதல் முறை ஓட்டு போட்ட இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இவர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.ஓட்டுச்சாவடிக்குள் சென்றதும் வழிமுறைகளை சொல்லிக் கொடுத்தனர். வாக்காளர் அட்டையை காட்டியதும், பதிவேட்டில் கையெழுத்து பெற்று, விரலில் மை வைத்து, ஓட்டளிக்க அனுமதித்தனர். எனக்கு ஒரு புரிதல் இருந்தது; அதன்படி, மாற்றம் ஏற்பட வேண்டும் என்கிற எண்ணத்தில், ஓட்டளித்தேன். மத்தியில் அமையும் அரசு, அனைத்து தரப்பு மாணவர்களுக்கும், சமமாக கல்வி வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்ய வேண்டுமென விரும்புகிறேன். - சுபிக் ஷா கணபதிமுதல்முறையாக ஓட்டளிக்கச் சென்றதால், பதற்றமாக இருந்தது. புதிய அனுபவமாக இருந்தது. ஓட்டுப்பதிவு செய்ததும், நாம் எந்தக் கட்சிக்கு ஓட்டளித்தோம் என்பதை 'விவி பேட்' இயந்திரத்தில், சின்னத்தை பார்த்தபோது, நாம் சரியாகத்தான் செய்கிறோம் என்கிற நம்பிக்கை ஏற்பட்டது. யார் ஆட்சிக்கு வந்தாலும், எல்லாம் எல்லோருக்கும் சமமாக கிடைக்க வேண்டும்.- ஜெனிதா கோவை இரண்டு முறை விண்ணப்பித்தும் ஓட்டுரிமை கிடைக்கவில்லை. இப்போது முதல் முறையாக ஓட்டளித்தேன். நன்றாக இருந்தது. இளைஞர்களின் கைகளில் நாடு இருக்கிறது என கலாம் சொன்ன கனவு, நனவாகும் என்பதில் எனக்கு மகிழ்ச்சி. ஒரு மாற்றம் நிகழ்ந்தால், புதிய சிந்தனைகளை செயல்படுத்துவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கிறேன். பள்ளி, கல்லுாரிகள் தனியாரிடமும், மதுபான கடைகள் அரசாங்கத்திடமும் இருக்கிறது; இந்நடைமுறையை மாற்றியமைக்க வேண்டும் என்பது எனது விருப்பம்.- ரேஷ்மா பாப்பநாயக்கன்பாளையம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ