மேலும் செய்திகள்
எம்.பி., திகைப்பு; மேயர் தவிப்பு
18-Feb-2025
கோவை; 'மனதில் உள்ள கெட்ட விஷயங்களை அகற்றினால், கடவுளை அடையலாம்' என சீர்காழி ஸ்ரீ சட்டநாத பாகவதர் பேசினார்.ராம்நகர் ஸ்ரீ கோதண்டராமசுவாமி கோவில் சார்பில், சங்கீத உபன்யாசம் நிகழ்ச்சி, ராம்நகர், ராமர் கோவில் மண்டபத்தில் இரண்டு நாட்கள் நடந்தது.நிகழ்ச்சியில், சீர்காழி ஸ்ரீ சட்டநாத பாகவதர் உரை நிகழ்த்தினார். முதல் நாள், 'ஸ்ரீ பத்ராசல ராமதாசர்' என்ற தலைப்பில், சங்கீத உபன்யாசம் நிகழ்த்தினார். நேற்று, 'போலகம் ஸ்ரீ விஜய் கோபால யதீந்திராள்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.நிகழ்ச்சியில், சீர்காழி ஸ்ரீ சட்டநாத பாகவதர் கூறுகையில், ''பஜனை சம்பிரதாயத்தில் மிக முக்கியமான குரு விஜய் கோபால யதீந்திராள். மனதில் உள்ள கெட்ட விஷயங்கள், எண்ணங்களை அகற்றினால் இறைவனின் அருள் நமக்கு கிடைக்கும்,'' என்றார்.
18-Feb-2025