உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே சட்ட விரோதமாக மது விற்றவரை கைது செய்த போலீசார், 72 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.பொள்ளாச்சி அருகே சட்டவிரோதமாக மது விற்பதாக போலீசார் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில் - மரப்பேட்டை பகுதி அருகே கிழக்கு போலீசார் ரோந்து சென்றனர்.அப்போது சந்தேகப்படும்படி நின்ற நபரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில், மரப்பேட்டையை சேர்ந்த நாகராஜ், 56 என்றும், சட்ட விரோதமாக மது விற்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், 72 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ