மேலும் செய்திகள்
காலமானார் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்தது
3 hour(s) ago
மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம்
3 hour(s) ago
ஜன., 3ல் ஆருத்ரா தரிசனம்
4 hour(s) ago
அசத்தலான அசைவ விருந்துடன் கிறிஸ்துமசை கொண்டாடலாம்
4 hour(s) ago
கோவை:டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வு, கோவை மாவட்டத்தில் இன்று (10ம் தேதி) 232 மையங்களில் நடக்கிறது; 69 ஆயிரத்து, 737 பேர் இத்தேர்வு எழுதுகின்றனர்.கோவை மாவட்டத்தில், 144 இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள, 232 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு இன்று நடக்கிறது. ஆனைமலை - 1,303, அன்னுார் - 3,220, கோவை வடக்கு - 20,251, கோவை தெற்கு - 14,228, கிணத்துக்கடவு - 2,460, மதுக்கரை - 3,380, மேட்டுப்பாளையம் - 4,400, பேரூர் - 3,841, பொள்ளாச்சி - 7,931, சூலுார் - 7,700, வால்பாறை - 1,023 என, 69 ஆயிரத்து, 737 பேர் இத்தேர்வு எழுதுகின்றனர். காலை, 9:30 முதல் மதியம், 12:30 மணி வரை இத்தேர்வு நடைபெறும்.இதற்காக 13 பறக்கும் படைகள், 94 மொபைல் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தாலுகா அளவிலான ஒருங்கிணைப்பாளர்களாக, தாலுகாவுக்கு ஒருவர் வீதம், 11 தாசில்தார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.தேர்வர்கள் தேர்வு மையத்துக்குச் செல்வதற்கு வசதியாக, சிறப்பு பஸ்கள் கூடுதலாக இயக்க, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடையின்றி மின்சாரம் வினியோகிக்கவும், போலீஸ் பாதுகாப்பு போடவும், தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கவும், அத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
3 hour(s) ago
3 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago