உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எஸ்.எஸ்.குளம் குறுமையத்தில் அரசு பள்ளி மாணவர்கள் அபாரம்

எஸ்.எஸ்.குளம் குறுமையத்தில் அரசு பள்ளி மாணவர்கள் அபாரம்

கோவை,: எஸ்.எஸ்.குளம் குறுமையத்துக்கு உட்பட்ட பள்ளிகளுக்கான டெனிகாய்ட் போட்டியில், அரசு பள்ளி மாணவர்கள் ஆதிக்கம் செலுத்தினர். கோவை கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட எஸ்.எஸ்.குளம் குறுமைய அளவிலான விளையாட்டு போட்டிகள், ரூபி மெட்ரிக்., பள்ளி சார்பில், பள்ளி வளாகத்தில் நடக்கிறது. போட்டியை, ரூபி பள்ளி அறங்காவலர் நவீன் ராஜன், செயலாளர் ரூபினி ஆகியோர் துவக்கி வைத்தனர். நேற்று, மாணவர் பிரிவு டெனிகாய்ட் போட்டி நடத்தப்பட்டது.இதன் 14 வயது இரட்டையர் பிரிவில், சரவணம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் அம்ரித், முகில் வர்ஷன் முதலிடம், அன்னுார் ஏ.ஏ.எம்.ஜி., அரசு பள்ளி பவன் கார்த்திக், பிரசன்னா ஜோடி இரண்டாமிடமும் பிடித்தது. இதபோல், 19 வயது ஒற்றையர் பிரிவில், காளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி கோகுல் கண்ணன் முதலிடம், ஏ.ஏ.எம்.ஜி., அரசு பள்ளி லோகேஷ் இரண்டாமிடம்; இரட்டையர் பிரிவில் காளப்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் கோகுல் கண்ணன், கிஷோர் முதலிடம், ஏ.ஏ.எம்.ஜி., அரசு பள்ளி மாணவர்கள் லோகேஷ், விக்னேஷ் இரண்டாமிடம் பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை