உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாரதியார் பல்கலையில் புதிய கட்டடம் திறப்பு

பாரதியார் பல்கலையில் புதிய கட்டடம் திறப்பு

வடவள்ளி:பாரதியார் பல்கலையில், 40 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட, புதிய கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.கோவையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, முதல்வர் ஸ்டாலின் நேற்று வந்தார். பாரதியார் பல்கலையில், கட்டப்பட்டுள்ள தாவரவியல், ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, இளநிலை (ஒருங்கிணைந்த) அறிவியல், வணிகவியல், சமூக பணியியல், உளவியல் கல்வியியல் சமூகவியல் மற்றும் மக்கள் தொகை ஆய்வுகள் உள்ளிட்ட, 8 துறைகளுக்கான புதிய கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில், துணைவேந்தர் குழு உறுப்பினர் லவ்லினா லிட்டில் பிளவர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ