உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர் தலைவர்கள் பள்ளியில் பதவியேற்பு 

மாணவர் தலைவர்கள் பள்ளியில் பதவியேற்பு 

கோவை : சீராப்பாளையத்தில் செயல்பட்டுவரும், வேதாந்தா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில், மாணவர் தலைவர்கள் பதவியேற்கும் விழா நடந்தது.சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட, 105 விரைவு அதிரடிப் படை செகண்ட் இன் கமாண்டட் சுனில்குமார், மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.பள்ளியின் மாணவர் மற்றும் மாணவி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, ஜம்போ நடனம், மழலையர் நடனம், கராத்தே, யோகா, சிலம்பத்தில் ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு போன்ற கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன. பள்ளி தாளாளர் ஓம் சரவணன், இயக்குனர் சுதர்ஷன் ராவ் மற்றும் வோரா, செயலாளர் நடராஜன், முதல்வர் சரவணன் ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை